Monday, December 8, 2008

கடவுளின் பிழை

 வானத்தின் பிழை பெரு மழை...........

பூமியின் பிழை பூகம்பம்.........

 ஆற்றின் பிழை வெள்ளம்.....

கடலின் பிழை சுனாமி....

காற்றின் பிழை சூறாவளி.....

மனிதனின் பிழை மதம்...!

கடவுளின் பிழை மனிதன்......!

 

இரா.வெங்கடேஷ்

எதையோ தேடுகிறேன்.........?!

எதையோ தேடுகிறேன்.........?!

 எதையோ தேடுகிறேன்.........?!

எதைத் தான் தேடுகிறேன்........!?

தேடுவது என்னவென்று..........

எனக்கே தெரிய‌வில்லை.........!

தேடுவ‌து கிடைத்துவிட்டால்......

தேடுவ‌து எதுவென்று தெரிந்துவிடும்...!

தேடுவ‌தை நிறுத்திவிட்டால்........

தேடுவ‌து கிடைத்துவிடும்.........இது சென் த‌த்துவ‌ம்....!

தேடுவ‌தை நிறூத்தியும் பார்த்துவிட்டேன்........

தேடுவ‌து கிடைக்க‌வில்லை........!

தேடுவ‌து தான் வாழ்க்கையின் அர்த்த‌ம் என்று................

தொட‌ர்ந்து தெடுகிறேன்.........!

இப்ப‌டி தேடிக்கொண்டே போய்........

வாழ்க்கையை தொலைத்துவிடுவேனோ....?

 

 

இரா.வெங்கடேஷ்

தலைவியின் ஏக்க பெரு மூச்சு.......

..

 

காளை வருவான் காலையிலே............!

 காதல் வரும் தேரினிலே.........!

 கன்னி இவள் பார்வையிலே...........!

கண்ணன் தெரிவான் மனதினிலே.......!.

மல்லிகை பூச் சூட..........

 மங்கை இவள் மணம் மகிழ..........

துள்ளி வருவானோ..........அள்ளி தருவானோ..............!?

முத்தங்கள் நூறாக .....அத்தனையும் தேனாக..........!

 வண்டை தேடும் பூவானேன்.......!

காமத்துக்கே பலியானேன்...........!

காத்திருந்தேன் வருவாயோ.........?

கட்டி அணைத்து முத்தம் தருவாயோ....?

பேதை மனம் புரியலையோ..........?!

 விழி பேசும் மொழி அறியலையோ...........?

ஏகாந்த இரவினிலே.......வெண்ணிலவு துணையினிலே........

வாசம் இழந்திருந்தேனே................

வாசனையாக வருவாயோ..........!?

 

இரா.வெங்கடேஷ்

 

பைத்தியம் என்றான்..........!?


 

யாருடன் பேசிக் கொண்டு இருந்ததாய்...........என்றான் நண்பன்.? என்னோடு பேசிக் கொண்டு இருந்தேன்...........என்றேன்.......! பைத்தியம் என்றான்..........!?

அவனுக்கு தெரியாது......

நான் காதலிக்கிறேன்...என்பது......!

 

இரா.வெங்கடேஷ்

 

இதயம் இல்லாதவன்

இதயம் இல்லாதவன்

இருப்பது ஒரு இதயம்.....

எத்தனை முறை தான் திருடுவது..!

எத்தனை பேர்தான் திருடுவது........!

 பொதுவில்.....திருடு கொடுப்பவர்கள் வருந்துவது இயல்பு............... ஆனால்;;;;; என் இதயம் திருடப்படும் ஒவ்வொரு முறையும்............ ம்கிழ்ச்சியாகவே இருக்கிற்து.........!

இப்படி திருடு கொடுப்பதே என் வேலையகிவிட்டது.........

சில நாட்க்களேனும்.........

என் இதயம் திருடப்படவில்லை என்றாலும்

 எனக்கு வருத்தமாகவே இருக்கும்.........!

இப்போழ்து மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.....! காரணம்,தற்சமயம்........................ ,

நீ தான் என் இதயத்தை திருடிக் கொண்டுவிட்டாயே....!?

இப்படி யாராவது என் இதயத்தை திருடவேண்டும்......... என்பதற்காகவே ......................தான்............

என் இதயதை பூட்டி வைப்பதில்லை..........!

இப்படி,தினமும் ஒவ்வொரு நிமிடமும்,

இதயத்தை........ திருடு கொடுப்பதால்தான்...........

நான் இதயம் இல்லாதவனாகவே இருக்கிறேன்..!

 ஆமாம்............ நான் இதயம் இல்லாதவன் தான்.........!?

 

இரா.வெங்கடேஷ்

உன்னை கண்டு பிடித்தேன்

உன்னை கண்டு பிடித்தேன்

 

உன்னை கண்டு பிடித்தேன்...................

என்னை தொலைத்து விட்டேன்.............!

உன்னை கண்டுப்டித்த சந்தோழத்தில்..............

என்னை தேட மறந்துவிடேன்...............!

 

 

இரா.வெங்கடேஷ்

 

நீ என்னை நிராகரிப்பததாக ...............

நினைத்துக் கொண்டு................

உன்னை நீயே............

 நிராகரித்துக் கொள்கிறாய்...........!?

 

இரா.வெங்கடேஷ்

 

தேடுவதை நிறுத்திக் கொண்டால்...............

தேடுவ்து கிடைக்கும்...........!

 இது சென் தத்துவ்ம்.......!

 இப்போது............

உன்னை தேடுவ்தை நிறுத்தி விட்டேன்........!

ஆமாம்.......... நீ எனக்கு கிடைப்பாயா...........?!

 

இரா.வெங்கடேஷ்

 

 

நானும் தியனிக்கிறேன்........?

நானும் தியனிக்கிறேன்........?

மனதை ஒன்றின் மேல் செலுத்தி.........

ஒரு நிலைப்படித்துவது தான் தியானமென்றால்....?!

 உன்னை எப்போதும் நினைத்து...................

வேறு எதையும் சிந்திக்காமல் இருக்கும்.......... நானும்................தியானிக்கிறேன்........!

இரா.வெங்கடேஷ்

 

நான்

வீணாக்குகிறேன்………..!?

 

 கால்ம் பொன் போன்றது............................!

அதை வீணாக்காதீர்கள் என்பார்கள்.................?!

உன்னோடு பேசாத........,பார்க்காத.............. பொழுதுகளில்...............அதை(காலத்தை) வீணாக்கியதாகவே....உணருகிறேன்........!

 

இரா.வெங்கடேஷ்

 

நான்

 

இந்த புகைப்படத்தில் இருப்பது நானா............?

இல்லை....இது என்னுடைய நேற்றைய நான்........................! நேற்றைய நான்.................. இன்றைய நான் அல்ல...........!

 இன்றைய நான் ................ நாளைய நான் அல்ல..................!

 தினமும் ,ஒவ்வொரு நொடியும்...... நிமிடமும்................

 என் உடலிலும்........,உள்ளத்திலும்.........

 மாற்றங்கள் நிகழும்போது.................

 இந்த புகைபடத்தில் இருக்கும் நான்........

எப்படி இன்றைய நானாக முடியும்..........?

ஆமாம்....... நேற்றைய நான்......இன்றைய நான் அல்ல....... இன்றைய நான்............. நாளைய நான் அல்ல ......!

பின் எப்போது நான்............

நானாக எப்போதும் இருப்பேன்.................?!

 

இரா.வெங்கடேஷ்

 

அணைத்துக் கொள்ளலாமா...............?

 

என்னை நானும்............... உனனை நீயும்................

அணைத்துக் கொள்ளலாமா...............?

 

இரா.வெங்கடேஷ்

Sunday, December 7, 2008

வாசகிக்கு ஒரு விண்ணப்பம்

வாசகிக்கு ஒரு விண்ணப்பம்
நான் புத்தத்கம்................
என் பக்கங்களில் என்ன எழுதியிருக்கிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என்று எனக்கே தெரியாது..!
எனது பக்கங்களை புரட்டி...............
படித்து அர்த்தம் புரிந்த்தை ............
நீ எனக்கு சொல்ல கூடாதா........?
ஆமாம்..............இந்த புத்தகம்.......
உன் இதய அலமாரியில்.................
பத்திரபடுத்த கூடிய புத்தகம் தானே..!
யார் என்னை விமர்சித்தாலும்...... பரவாயில்லை...........!காரணம்...........இந்த் புத்தகம்...........
நீ மட்டும் படித்து இன்புறுவ்தற்காகவே...........ப்டைக்கப்பட்டது....!
நீ இந்த் புத்தகதை மறக்காமல்............
பத்திரபடுதிருந்தாலே,அதுவே எனக்கு பெருமை....!
என் அன்பான வாசகியே இதை நீ...செய்வாயா,............................?!

இரா.வெங்கடேஷ்

என் இனிய கடலே

என் இனிய கடலே

 நீ கடல்.........என்றால்..................

நான் கரை.......!

என் இனிய கடலே..........!

 உன் அழகிய அலைகலைக் கொண்டு.......

என்னை உன்னோடு கரைத்துக் கொள்.......!

இந்த கரை கரையாக இருப்பதில்.......

விருப்பமில்லை......!

 தன் நிலை இழந்து உன்னோடு..............

ஐக்கிய்ப் பட்டு போவதையே........விரும்புகிற்து.!

 கரை வேறு.........கடல்.....வேறு.........

என்ற வேற்றுமை நீஙகிய...........

 கடல் ஒன்றே என்ற ஒருமை நிலை.!

 கரைகள் அற்ற கடல்...........

அத்மா.......பரமாத்மாவுடம்............ சேர்ந்து..................

ஒன்றுபட்ட நிலையை அடைவதை.போல்.....!

 

இரா.வெங்கடேஷ்