Thursday, October 21, 2010

தமிழ் ஈழம் மலரும்

ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிதைத்ததில் இந்தியாவிற்கு பெரும் பங்கு உள்ளது,இலட்சகணக்கான விடுதலைப்புலிகளின் வீர தியாகம் வீண் போகாது,எந்த ஒரு போராட்டமும் தன் இலக்கை அடையாமல் முற்று பெற்ற தில்லை,தமிழ் ஈழம் நிச்சயம் மலர்ரும்,போராட்ட முறை மாறலாம்,ஆனால் போராட்டம் தொடரும்,அதற்கு தேவை மன உறுதி,இன்றைய ஈழப்போரினால் ஈழ தமிழ் மக்கள் துவண்டு போனாலும்,காலம் மாறும் மீண்டும் மீண்டு எழுவார்கள்,போராடி தமிழ் ஈழம் பெறுவார்கள்,அதுவரை ஈழத்தமிழரின் எண்ணிக்கை குறைவதை தடுக்கவேண்டும்,சிங்களவனுக்கு நிகராக நாம் ,நம் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும்,ஒவ்வொரு ஈழ குடுமபமும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளவேண்டும்,அவர்களுக்கு நம் விடுதலைப்போராட்ட வரலாறை சொல்லி வளர்க்க வேண்டு,வருங்கால இளைஞர்கள் தமிழ் ஈழம் காண்பார்கள்,
ஒரு விடுதலைப்போராட்டத்தை சீர்குலைத்த கேவலமான இந்தியாவில் பிறந்தேன் என்பதற்காக வெடகப்படுகிறேன்,காங்கிரஸும்,சோனியா குடுமபமும் இந்திய அரசியலில் இருந்து ஒதுக்கப்படும் காலம் வெகுவிரைவில் வரும்,

Tuesday, July 20, 2010

புலிகள் புதைக்கபடுவதில்லை விதைக்க படுகிறார்கள்,
எந்த ஒரு விடுதலை போராட்டமும்,தன் இலக்கை அடையாமல் முற்று பெற்றதில்லை,
தமிழ் ஈழ விடுதலை போராட்டமும் அப்படி தான்,
கால்ங்கள் கடந்தாலும் நிச்சயம் ஈழத் தமிழர்கள் விடுதலை அடைவார்கள்,சம் உரிமை பெறுவார்கள்/

அதே போல் ஒரு போராட்டமும் காரணமும் இன்றி தோன்றாது.
அது போல் தான் ஈழத்தில் ,விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து சென்ற விடுதலை பு,லிகளும்,அதன் போராட்டமும்.,

எந்த ஒரு மனிதனும் தன் அமைதியான் வாழ்க்கையை விட்டு விட்டு ,ஆயுத ஏந்தி போராட துணிய மாட்டான்,அப்படி ஆயுத ஏந்தி போராடுகிறான் என்றால்,அவன் அந்த சூழலுக்கு தள்ளபடுகிறான் என்று அர்த்தம்,

ஆயுதவழி போராட்டம் என்றாலும் ,அகிம்சை வழி போராட்டம் என்றாலும் காரணம் இன்றி தோன்றாது,

ஈழத்தமிழர்கள் மீது ஆயுத வழி போராட்டம் ,சிங்கள அரசால் திணிக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் அகிம்சை வழி போராட்டங்களை ஒடுக்கியது,அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றாமல் இராணுவத்தை கொண்டு அடக்கியது,இனபடுகொலை செயததன் விளைவே,ஈழததமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

ஆனால் இங்கு சில அறிவு ஜீவிகள் ,புலிகளை பயங்கிரவாதி என்று குறை கூறிக்கொண்டு இருக்கின்றன்,

தன் தெருவில் உள்ள சாலை சரியில்லை என்பதற்காகவோ ,தங்கள் பகுதியில் குப்பை கள் அகற்றபடவில்லை என்பதற்க்காகவோ கூட ஒரு சிறு எதிர்ப்பு கூட காட்ட தெரியாத ,தைரியம் இல்லாத இதுகள் ,பிரபாகரனை பயங்கிரவாதி என்று சொல்வது வேடிக்கை,

விஜ்யோ,அஜித்தோ படத்தில் தன் தங்கையை கெடுத்தவனை பழிக்கு பழி வாங்காமல் மன்னித்து விட்டால் வருத்தபடுவது,இறுதியில் வில்லன் கொல்லபட்ட பிறகு சந்தோஷப்படும் இவர்கள் ,படத்தில் சும்மா நடிப்புக்காக கற்பழிக்கபட்ட பெண்னுக்காக வருத்தப்ட்டு பழிவாங்க துடிக்கும் இவர்கள் நிசத்தில் பல்லாயிரம் நம் தமிழ் ஈழச் சகோதரிகள் கற்பழிக்கபடுவதை பார்த்துக் கொண்டு புலிகள் சும்மா இருக்க வேண்டும்.,மாறாக அத்தகைய தீய சிங்களவர்களை தாக்கினால் பயங்கிரவாதி என்று பட்டம் கட்டி விடுவார்கள்,

போங்கடா நீங்களும் உங்கள் சிந்தனையும்.

மொழி தெரியாத போராளியை போற்றி சேவின் படம் பனியனில் போட்டுக்கொள்வார்கள்,நம் மொழி பேசும் பிரபாக்ரன் அவர்களை பயங்கிரவாதி என்பர்ர்கள்,

சிந்தனையில் ஊனம் உள்ள இவர்கள்
விடுதலை போராளி தலைவர் பிரபாகரன்
இது அபத்தமான கேள்வி,பிரபாகரன் பயங்கிரவாதி என்று சொல்லுபவர்களுக்கு என்ன தகுதி இருக்கு.

போராட்டம் இரண்டு வகை படும் ஒன்று முதவாதம் மற்றொன்று தீவிரவாதம்,

அகிம்சை வழியில் போராடுவது மிதவாதம்,

ஆயுத வழியில் போராடுவது தீவிரவாதம்,

(இதில் இரண்டிலும் கலந்து கொள்ளாமல் இவற்றில் ஒன்றை ஆதரித்துக் கொண்டு இருப்பது நம்மை போன்ற உலகில் எந்த மற்றத்தையும் ஏற்படுத்த இயலாத வக்கத்த ஆனால் தன்னை அறிவிஜீவியாக பாவித்துக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம்,)

அகிம்சை வழி அதை அதிகம் விளக்கவேண்டியதில்லை,அது நம்மவருக்கு தெரியும்,

ஆனால் ஆயுத வழி போராத்தை தான் பயங்கிரவாதம் என்று சிலர் குழும்பிக்கொள்கிறார்கள்.

அப்படி என்றால் தன் சகோதரனை கொன்ற அர்ஜுனன் தீவிரவாதியா,?
கொல் என்று உபதேசித்த கிருஷணர் தீவிரவாதியா?

போராட்டத்தில் சில சமயங்களில் நம் இனத்தை சேர்ந்தவர்களே நமக்கு எதிராக செயல்படும் போது அவர்களை போராட்டத்தின் வலிமை குறையாமல் இருக்க அவர்களை கொல்வதால் அந்த போராட்டத்தை பயங்கிரவாதம் என்று கூறிவிடமுடியாது,

ஒரு இயக்கம் தோற்று விடாமல் பயணிக்க சில சமயங்க்ளில் தன் இனத்தை சேர்ந்தவரையே கொல்ல நேரிடுகிறது,இது ஆயுத போராட்டத்தில் தவிர்க்க முடியாது,
ஒரு சில பேரை கொன்றதால்,புலிகளை பயங்கிரவாதி என்று சொல்லும் இவர்கள்,பல இலட்சம், தமிழர்களை கொன்று குவித்த சிங்களவர்களை கொன்று குவித்த சிங்கள அரசு பயங்கிரவாதமாக தெரியவில்லையா?,
இதில் நாம் முதலில் எதை எதிர்க்க வேண்டும் என்ற தெளிவு இருந்தால் புலிகளை பயங்கிரவாதி என்று கூறமாட்டோம்,
சிங்கள அரசு கூட ,தமிழர்க்கு ஆதரவாக எழுதிய சில சிங்கள பத்திரிகையாளர்களை கொன்று உள்ளது,
தமிழர்க்கு ஆதரவாக பேசியதால் ,சட்டம் கொண்டு வர முயன்றதால் சிங்கள அதிபர் பாண்டாரநாயகா ,சிங்கள பொளத்தர்க்ளாலேயே கொல்லப்பட்டார்.

இதை புலிகளை பயங்கிரவாதிகள் என்று கூறுபவர்கள் எண்ணி பார்க்கவேண்டும்,

ஒரு விடுதலை போராட்டத்தை ஆதரிப்பதற்கு தகுதி தேவையில்லை,மனித நேயம் உள்ள அனைத்து இனத்தவரும் ஆதரிக்கலாம்,
ஆனால் போராட்டத்தை,புலிகள் நடத்தும் விடுதலை போராட்டத்தை குறை கூறவேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டும்.
வெந்ததை தின்று சொகுசு வாழ்க்கை வாழும் இவர்கள் மனித நேயம் தெரியாத இவர்கள் விடுதலை புலிகளை,பிரபாகரனை குறை கூற தகுதி இல்லை

Saturday, July 18, 2009

போராட்டம்

போராட்டம்

போராட்டம்

மனிதன் தோன்றிய காலத்த்தில் இருந்து அறிவு பெற்று உயர்ந்து நிற்கும் இன்றைய காலம் வரை,அவன் பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டு தான் வருகிறான்.போராட்டம் இல்லாத மனிதனோ,மனித சமுதாயமோ இல்லை என்கிற அளவுக்கு இன்றைய நிலைமை உள்ளது.தனி மனித தேவைகளுக்கான வாழ்க்கை போராட்டம் முதல் சமுதாய போராட்டமான இன போராட்டம்,மொழி போராட்டம்,தன் நாட்டை மீட்க சுதந்திர போராட்டம் இப்படி நீண்டு கொண்டே போகிறது.

உலகில் போராட்டம் ஏன் எற்படுகிறது? என்பதை சற்று சிந்திப்போம்,உலகில் மனிதர்கள் அனைவரும் சமம்.அப்படியிருக்க ஒரு மனிதன் ஒரு மனிதனை அடிமைப்படுத்தும் போது,ஒரு நாடு ஒரு நாட்டை அடிமைப்படுத்தும் போது,ஒரு மொழி,ஒரு மொழியை ஆதிக்கம் செலுத்தி அழிக்க நினைக்கும் போது,இயல்பாக அங்கே போராட்டம் தோன்றுகிறது.தன் உரிமைக்காக ,தன் பொழிக்காக,தன் இனத்திற்காக குரல் கொடுக்காத மனிதன் மனிதனே அல்ல.

போராட்டத்தின் நோக்கம் இலட்சியத்தை அடைவது, வெற்றி காண்பது,உரிமையை கேட்பது,எதிரி தன் தவறை உணரச்செய்வது ஆகியவையே ஆகும்.

பொதுவாக உலகில் நாம் இரண்டு வகையில் போராடி உரிமையை,இலட்சியத்தை,சுதந்திரத்தினை பெற முடியும்.

ஒன்று மிதவாதம் அதாவது அகிமசை வழி,மற்றொன்று தீவிரவாதம் அதாவது ஆயுதம் ஏந்தி போராடுவது.இதில் மிதவாத வழியே (அகிம்சை வழியே) சிறந்த்து என்பதில் இருவேறு கருத்துகள் யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.

இப்போழுது நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது.இந்த இரு வழிகளில் எந்த வழியில் சென்றால் நாம் வெற்றியை,இலட்சியத்தை,விடுதலையை அடைய முடியும்.

மிதவாதம் சிறந்தது என்பதினாலேயே அவ்வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று கூறிவிட முடியாது.காரணம் நடைமுறையில் ,மிதவாதம் இன்றைய காலகட்டத்தில் தோல்வியையே தழுவியுள்ளது.

ஒரு காலத்தில்,நம் நாட்டின் சுதந்திரத்தினை காந்தியடிகள் அகிம்சைவழியில் போராடி பெற்று தந்ததார்.அன்றைய காலகட்டத்தில் ,காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தை,நம்மை ஆண்ட ஆங்கிலேய அரசு ஒர் அளவுக்கு அனுமதித்ததினால் தான்,நம் நாட்டின் சுதந்திரம் சாத்தியமாயிற்று.காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தை மதித்து அவரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது அன்றைய ஆங்கிலேய அரசு.ஆனால் இன்றைய சூழலில் ,அதே சுதந்திரத்தினை அகிம்சை வழியில் போராடி பெற்றிருக்க முடியுமா என்பது உறுதியாக கூறமுடியாது..

அன்றைய காலகட்டத்தில் கூட காந்தியடிகள்,ஒரு சமயம் பொறுமை இழந்து ‘செய் அல்லது செத்து மடிஎன்று வீர முழக்கமிட்டார்.

நாம் உண்ணாவிரதம் இருக்கும் போது,நாம் யாரை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறோமோ அவர்கள் அந்த உண்ணாவிரதத்தை மதித்தால்,அந்த அகிம்சை போராட்டம் வெற்றி பெற சாத்தியம் உண்டு.ஆனால்,அப்படி உண்ணாவிரதம் இருப்பவரை,காவல் துறை கொண்டு அடக்க நினைத்தால்,அவர்கள் மீது வன்முறையை கட்டவிழுத்து விட்டால் ,அங்கு அகிம்சை பயன் அற்று போகிறது.

அகிம்சை பயன் அற்று போகும் நிலையில்,அங்கு தீவிரவாதம் தலைதூக்குகிறது.

இதனால் தீவிரவாத்தின் மூலம் உரிமையை பெற்ற விட முடியும் என்றால்,அதுவும் உறுதியாக கூறமுடியாது.காரணம் நாம் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும்,அந்த அளவுக்கு நம் எதிரி பலசாலியாக இருந்தால் அங்கு யாருக்கும் வெற்றி கிட்டாது.பல உயிர்கள் இரு தரப்பிலும் மடிவதே நிகழும்.

அகிம்சை வழி போராட்டமோ அல்லது தீவிரவாத போராட்டமோ அது ஒடுக்க பட்ட மக்களின் சுதந்திர போராட்டத்தின் இரு வேறு வழிகள் அன்றி அவற்றால் வெற்றி கிடைத்து விடும் என்று உறுதியாக கூற முடியாது.

பிறகு இதற்கு வழி தான் என்ன?

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்.

தீமை செய்தவர்கள்,தங்கள் தவறை உணர்ந்து வெட்கம் அடையும் வகையில் அவர்களுக்கு நாம் நன்மையை செய்திடல் வேண்டும்.என்று வள்ளுவர் கூறுகிறார். அது இன்றைய காலகட்டத்தில் எந்த அளவு எடுபடும் என்பது சந்தேகமாகவே உள்ளது.

போராட்டம் வெற்றி பெற ,நாம் மேற்கொண்ட இலட்சியப்பயணம் குறிக்கோளை அடைந்திட,சுதந்திரம் பெற்றிட நம் போராட்ட வழிமுறைகள் மட்டும் சரியாக இருந்தால் போதாது.நாம் யாரை எதிர்த்து போராடுகிறோமோ,அவர்கள் சற்று சிந்திப்பவர்களாக,நமது பக்கத்து நியாயத்தை உணர்பவர்களாக இருத்தல் வேண்டும்.அப்படி இருக்கும் பட்சத்தில் இலட்சியத்தை,சுதந்திரத்தை எளிதில்.பெற்றுவிடலாம்.

ஆனால் அது நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.இது சாத்தியமற்று போகும் போது தான் ஒடுக்க பட்ட இனம்,தன் உரிமைக்காக,சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராட தீவிரவாதத்தில் இறங்குகிறது.

நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று நம் எதிரி தான் தீர்மானிக்கிறான் என்று கூறுகிறார் மாவோ.ஆகவே தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களை மட்டும் குறை கூறுவதில் எந்த நியாயமும் இல்லை.

காந்தியை போற்றும் நாம் ,நேதாஜியையும்,வாஞ்சிநாதனையும்,

பகத்சிங்கையும் போற்றுகிறோம்,அவர்கள் தீவிரவாத வழியை தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் இலட்சியம் உயர்வானது,உன்னதமானது.ஆகவே,அவர்களை போற்றி வணங்குகிறோம்.

அகிம்சை வழியோ அல்லது தீவிரவாத வழியோ அது நம் எதிர்ப்பை காட்டும் ஒரு வழி அவ்வளவே.

வாழ்க்கையில்,அகிம்சை என்று பேசும் நாம் வன்முறையை தான் அன்றாட வாழ்க்கையில் அதிகம் நாடுகிறோம்.இதற்கு காரணம்,தான் என்ற இறுமாப்புடன் ,தான் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவன் என்கிற கர்வத்துடன் மற்றவர்களை அடிமைபடுத்தும் சில மனித தன்மை அற்ற சில ஆதிக்கம் செலுத்துபவர்களால் தான் ஏற்படுகிறது,

தனி மனித வாழ்க்கையிலும்; பல சமயங்களில் நாம் பொறுமை இழந்து வன்முறை,மிரட்டல் போன்றவற்றில் ஈடுபடிகிறோம்.

இப்படி இருக்க,குறிப்பிட்ட இனம் தன் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி அது வன்முறை கொண்டு ஒடுக்க படும் போது,அது ஆயுத வழியில் போராட நினைப்பதில் என்ன தவறு,

தீவிரவாத வழியில் போராடும் போது பல உயிர் இழப்புகள் ஏற்படும் அதனால் அதனை எதிர்க்கிறோம், என்கிறார்கள்.

அகிம்சைவழியில் போராடும் போது கூட நம் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் நாம் பல சுதந்திர போராட்ட வீரர்களை இழந்திருக்கிறோம்.

அகிம்சை வழியில் போராடிய திருப்பூர் குமரன் ,போலீஸ் தடியடியில் உயிர் இழந்தான், அகிம்சை வழியில் ஒன்று கூடிய தொண்டர்களை ,ஜாலியன்வாலாபாத்தில் சுட்டு கொல்லபட்டார்கள்.இப்படி பல உதாரணங்களை கூறிக்கொண்டே போகலாம்.

கிம்சைவழியில் போராடி சுதந்திர பெற்ற நம் இந்தியா தான் ,இன்று அகிம்சைவழியில்,பல்வேறு கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருக்கும் நம் மக்களை தடியடி கொண்டும்,கைது செய்தும் அடக்கி வருகிறது,.இது மிதவாதத்திற்கு கிடைத்த மாபெரும் தோல்வியே ஆகும்.படிப்பது இராமயணம் ,இடிப்பது பெருமாள் கோயில் என்ற கதையாக தான் நம் அரசாங்கம் செயல்படுகிறது.மாநில சுயாட்சி,அணைத்து மொழிகளும் தேசிய மொழியாக்க,நதி நீர் இணைப்பு,தீண்டாமை ஒழிப்புக்காக இப்படி பல நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் போது ,நம் இந்திய மத்திய அரசு வன்முறை கொண்டு அடக்குகிறது,

உரிமைக்காக மக்கள் அணி திரண்டு ஆயுதம் ஏந்தி போராடினால் ,அதை பயங்கிரவாதம் என்று கொச்சை படுத்துவது,ஆனால் அதையே, அரசாங்கம் தன் இராணுவத்தை கொண்டு போராடும் மக்களை தாக்கினால் ,அது பயங்கிரவாதம் கிடையாதா?

சுதந்திர போராட்டத்திற்க்காக ,மொழிக்காக தன் இனத்தின் உரிமைக்காக போராடுபவர்கள் இலட்சியத்தை ,குறிக்கோளை மட்டுமே பார்ப்பார்கள்.தாங்கள்,தங்களை ஒடுக்குபவர்களை காட்டிலும் பலசாலியா ? இல்லையா ? என்று சிந்தித்து பார்த்து கொண்டிருக்கமாட்டார்கள்,.முதலில் அகிம்சை வழியிலும் பிறகு அது பயன் அற்று போகும் போது தீவிரவாத வழியிலும் போராட துணிவார்கள். இது இயல்பு.அவ்வாறு போராடுவதால் சுதந்திரம் கிடைக்குமா இல்லையா என்று யோசித்து கொண்டு எந்த இயக்கமோ,போராளிகளோ களத்தில் போராட இறங்குவதில்லை.அகிம்சை வழியோ ,தீவிரவாத வழியோ முடிவை தெரிந்து கொண்டு போராட முடியாது.நம் எதிர்ப்பை,நம் விடுதலை உண்ர்வை இரு வேறு வழிகளில் நம்மை அடக்கி ஆள்பவனுக்கு புரியவைக்கிறோம்,.அவ்வளவு தான்.உண்மையில் ,தீர்வு போராட்டத்தினை நடத்துபவர்கள் கையில் இல்லை,அது யாரை எதிர்த்து போராடுகிறோமோ அவர்கள் கையில் தான் உள்ளது,

இன்று கூட நாம் புகழ்ந்து வணங்கும் வீரபாண்டிய கட்டபொம்மன்,நாம் ஆங்கிலேயரை விட ஆயுத பலம் குறைந்தவர்கள் என்று தெரிந்தும்,அவர்களை எதிர்த்து போரிட்டு துக்குமேடை சென்று வீரமரணம் அடைந்தான்.இதற்கு காரணம்,தன்மானம்,சுதந்திர உணர்வு ஆகியவையே ஆகும்,.இதுவே மனிதனின் தனிச்சிறப்பு ஆகும்.அப்படிப்பட்ட கட்டபொம்மனை நாம்,வன்முறைவாதி என்று கூறி ஒதுக்குவதில்லை.,மாறாக,அவனது வீரத்தை போற்றுகிறோம்,வணங்குகிறோம்.

ஆம்,அடிமைப்பட்டவர்களுக்கு,ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழிகள் முக்கியமல்ல.குறிக்கோள்,உரிமை,சுதந்திரம் இது தான் முக்கியம்.ஆம்,மனிதன் வெறும் சடம் அல்ல.அவன் உணர்வு உள்ளவன்;மானம் உள்ளவன்;சுதந்திர எண்ணம் உள்ளவன்.தன்னை எப்போதெல்லாம் ஒடுக்குகிறார்களோ,அப்போதெல்லாம் அவன் போராட தொடங்கிவிடுகிறான்.

ஆம் ,உயிர் அவனுக்கு மிக்கியமல்ல.இலட்சியத்தை அடைய,சுதந்திரத்திற்க்காக உயிரையே கொடுப்பவன் தான் மனிதன்,மனித குலம்.

சாம,பேத,தான,தண்டம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

ஆகவே,ஒருவன் ஆயுதம் ஏந்தி தீவிரவாதி ஆவது,அவன் குற்றமல்ல.அதற்கு காரணம் ,அவனை,அவன் இனத்தை,மொழியை அழிக்க நினைக்கும் ஆதிக்க சக்திகளே காரணம் ஆகும்.ஆதிக்க சக்திகள் அடக்க்கு முறையை கொண்டு ஒடுக்க நினைக்கும் போது தான் ,அவர்கள் வேறு வழி இன்றி ஆயுதம் ஏந்த தலைபடுகிறார்கள்.

ஆதிக்க சக்திகளே சற்று சிந்தியுங்கள்,உங்களைப் போல் தானே உங்களால் ஒடுக்கப்படும் மக்களும் என்பதை உணருங்கள்.அவர்களுக்கு உரிமையும்,சுதந்திரத்தினையும் கொடுங்க்ள்.அவர்கள் கேட்பது .அவர்கள் வாழ்விடங்களில் அவர்கள் கலாச்சாரத்தை,மொழியை பேசி வாழும் உரிமையை தான்.அவர்கள் உங்களின் நிலத்தில் சிறு அங்குளம் கூட கேட்கவில்லை.

மிதவாத போராட்டமோ,தீவிரவாத போராட்டமோ மனித வாழ்வின் பொன்னான நேரமல்லவா வீணாகிறது.கலை,அறிவியல்,தொழில்,இப்படி பல துறைகளில் ஈடுபட வேண்டிய மனித மனம் உரிமை,சுதந்திரம் என்று இன்றைய அறிவியல் யுகத்தில் உழன்று கொண்டிருப்பது நலமோ ?

ஆதிக்கவாதிகளே ,பிறரை ஒடுக்கி வாழும் இனத்தவரே,ஒடுக்கி வாழ நினைப்பவர்களே சிந்தியுங்கள்,மனமாற்றம் கொள்ளுங்கள்.நாட்டில் அமைதி ஏற்படுவது உங்கள் கையில் தான் உள்ளது.எல்லோரும் எல்லா உரிமைகளும் பெற்று வாழும் வகை செய்யுங்கள்.

மனித இனத்தை மனித இனம் அழிக்கும் மடமையை கொளுத்துவோம்.

மனித சக்தி ஆக்க வழியில் ஈடுபடட்டும்.வாழ்க்கையின் இன்பங்களை சுவைக்கட்டும்.பிறந்ததன் பயனை அடையட்டும்.

மிதவாதமோ,தீவிரவாதமோ அணைத்து போராட்டங்களையும் தவிர்ப்போம்.வாழ்க்கையை அனுபவிப்போம்.நல்ல அமைதியான சூழ்நிலையை வருங்கால சந்ததினருக்கு விட்டுச் செல்வோம்.

வாழ்க மனித நேயம்.

இரா.வெங்கடேஷ்.

Monday, December 8, 2008

கடவுளின் பிழை

 வானத்தின் பிழை பெரு மழை...........

பூமியின் பிழை பூகம்பம்.........

 ஆற்றின் பிழை வெள்ளம்.....

கடலின் பிழை சுனாமி....

காற்றின் பிழை சூறாவளி.....

மனிதனின் பிழை மதம்...!

கடவுளின் பிழை மனிதன்......!

 

இரா.வெங்கடேஷ்

எதையோ தேடுகிறேன்.........?!

எதையோ தேடுகிறேன்.........?!

 எதையோ தேடுகிறேன்.........?!

எதைத் தான் தேடுகிறேன்........!?

தேடுவது என்னவென்று..........

எனக்கே தெரிய‌வில்லை.........!

தேடுவ‌து கிடைத்துவிட்டால்......

தேடுவ‌து எதுவென்று தெரிந்துவிடும்...!

தேடுவ‌தை நிறுத்திவிட்டால்........

தேடுவ‌து கிடைத்துவிடும்.........இது சென் த‌த்துவ‌ம்....!

தேடுவ‌தை நிறூத்தியும் பார்த்துவிட்டேன்........

தேடுவ‌து கிடைக்க‌வில்லை........!

தேடுவ‌து தான் வாழ்க்கையின் அர்த்த‌ம் என்று................

தொட‌ர்ந்து தெடுகிறேன்.........!

இப்ப‌டி தேடிக்கொண்டே போய்........

வாழ்க்கையை தொலைத்துவிடுவேனோ....?

 

 

இரா.வெங்கடேஷ்